Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகை…. சரி பார்ப்பது எப்படி…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை யிலும் வழங்கப்படும்.

இந்நிலையில் 11-வது தவணை குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிம்லாவில் நடைபெற்ற கரிப் கல்யாண் சம்மேளனில் உரையாற்றும்போது கூறியுள்ளார். அதன்படி pm-kisan திட்டத்தின் 11-வது தவணையை பெறுவதற்கு‌ KYC இணக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இந்த திட்டத்தின் பயனாளிகள் உங்களுடைய பெயரை பட்டியலில் எப்படி சரி பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு முதலில் நீங்கள் pmkisan.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விவசாயிகளின் மூலை பிரிவின் கீழ் உள்ள பயனாளி நிலை என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து பயனாளிகளின் பட்டியல் பக்கம் வரும். அதில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து get report என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்களுக்கு வேண்டிய விவரங்களை பார்க்கலாம்.

அதன்பின் பயனாளிகளின் நிலையை இணையதளத்தில் எப்படி சரிபார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு நீங்கள் முதலில் pmkisan.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று விவசாயிகளின் மூலை பிரிவின் கீழ் உள்ள பயனாளி நிலை என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் உங்களுடைய ஆதார் அட்டை எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து get data என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தால் தவணையின் நிலையை பார்த்து கொள்ளலாம்.

Categories

Tech |