நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது.
அவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது. அதாவது விவசாயிகள் ஆதார் வாயிலான கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம் முடிக்க வேண்டும். கேஒய்சி என்பதை வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் நடைமுறையாகும். பொதுவாக இந்த நடைமுறையை வங்கிகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன. எனவே pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவரும் நிதி உதவி பெறுவதற்கு சரிபார்ப்பு மிகவும் அவசியம். அதனை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் அதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் விவசாயிகள் பலரும் இன்னும் கேஒய்சி முடிக்காமல் உள்ளனர். இந்த நிலை நீடித்தால் அவர்களின் கணக்கில் பன்னிரண்டாவது தவணை பணம் செலுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி அப்டேட் முடிக்காத விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஒரு சிறப்பு இயக்கம் நடத்தப்படும்.
இ கேஒய்சி பிரசாரத்தை ஆகஸ்ட் 16 மற்றும் 23 க்குள் முடிக்கும் நோக்கத்திற்காக கிராம பஞ்சாயத்து அளவில் விவசாயிகள் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த முறை இ கேஒய்சி சிறப்பு பிரசாரத்தை ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடத்தி முடிக்கப்படும்.அரசியல் இந்த உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 16 முதல் 23ஆம் தேதிக்குள் கேஒய்சி இருந்து விடுபட்ட விவசாயிகளை தொடர்பு கொண்டு பணிகளை முடிக்க வேண்டும். பிஎம் கிசான் திட்டத்தின் பனிரெண்டாவது தவணைக்கான பணத்தை ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை விவசாயிகள் பெறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
E-KYC ஏறுவதற்கான வழிமுறைகள்:
முதலில் pmkisan.gov.in என்ற PM Kisan Yojana இணையதளத்திற்குச் செல்லவும்.
இங்கே விவசாயிகளின் மூலையில், மவுஸ் ஓவர் மற்றும் E-KYC டேப்பில் கிளிக் செய்யவும்.
திறக்கும் புதிய இணையப் பக்கத்தில் ஆதார் எண்ணை உள்ளிட்டு தேடல் தாவலைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
OTPயைச் சமர்ப்பித்த பிறகு இங்கே கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்கள் e-KYC பெறுவதற்கான வழிமுறைகள் நிறைவடைந்து விடும்.