Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்….. பணத்தை உடனடியாக திரும்ப செலுத்த அறிவுறுத்தல்….. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்ற தகுதியில்லாத நபர்கள் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 11 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 12-வது தவணை தொகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சில தகுதியற்ற நபர்களும் பணம் பெறுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 21 லட்சம் தகுதியற்ற நபர்கள் பணத்தைப் பெற்றுள்ளனர்.

அதோடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதும் தற்போது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இதுவரை பணம் பெற்ற தகுதியற்ற நபர்களிடமிருந்து பணம் திரும்ப பெறப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தகுதியற்ற நபர்கள் பணத்தைப் பெற்றிருந்தால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாக பணத்தை திரும்ப செலுத்துமாறு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தகுதியற்ற நபர்கள் எப்படி பணத்தை திரும்ப செலுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் திரும்பப் பெறு என்ற ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டு பணத்தை திரும்ப செலுத்துவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்து விட்டு கிளிக் செய்ய வேண்டும்.

இதனையடுத்து வங்கி கணக்கு எண், ஆதார் அட்டைஎண், மொபைல் எண் போன்றவற்றை பதிவேற்றம் செய்துவிட்டு, தரவைப் பெரு என்று ஆப்ஷனை கிளிக் செய்து விட்டு, திரும்ப பெற வேண்டிய அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்த பிறகு, ரீபண்ட் பேமென்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மெயில் ஐடி மற்றும் தொடர்பு விபரங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டிய பக்கத்திற்குள் சென்று, பணத்தை  செலுத்தும் வங்கியின் விவரங்களை கிளிக் செய்து, தாங்கள் பெற்ற பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். மேலும் தகுதியற்ற நபர்கள் தாங்களாகவே முன்வந்து பணத்தை செலுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உபி அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |