Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது. என்ற படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் விவசாயிகளுக்கு இதுவரை 10 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பதினோராவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணம் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்குள் வந்துசேரும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ கேஒய்சி கட்டாயம் என்றும் தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிஎஸ்சி சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயோ மெட்ரிக் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை செய்யாமல் இருந்தால் பணம் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மேலும் இது குறித்து தகவல்களை தெரிந்துகொள்ள https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் தற்போது விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசை இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட உதவித்தொகையை மத்திய அரசு மே 14ஆம் தேதியன்று வங்கி கணக்குகளில் செலுத்தியது. அதன்படி இந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப் படலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |