Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகை…. சரி பார்ப்பது எப்படி…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை யிலும் வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி 11-வது தவணை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது. அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவில்லை என்றால் அதை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் pm-kisan திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pm-kisan.gov.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இதனையடுத்து பார்மர் கார்னர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நன்மை நிலை விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்துவிட்டு, Get data என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் விவசாயிகளின் தவணைத் தொகையின் நிலையை‌ப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் eKyc -ஐ சரி பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த செயல்முறையை நீங்கள் முடிக்க வில்லை என்றாலும் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் ஏறாது. எனவே eKYC-ஐ உடனடியாக முடித்து விடுங்கள். இதை சரி பார்த்த பிறகும் பணம் வரவில்லை என்றால் pm-kisan திட்டத்தில் உள்ள உங்களின் நிலை மற்றும் பயனாளிகளின் பட்டியலை சரிபார்க்க வேண்டும். இதை சரி பார்த்த பிறகும் பணம் வரவில்லை என்றால் உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருக்கலாம். இந்த தவறுகளை போர்ட்டலிலும், கிருஷி சகாயதா கேந்த்ராவிலும் சென்று சரி செய்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு‌ [email protected] என்ற இணையதள முகவரியிலும், 011-24300606, 155261 இலவச எண்ணிலும் கேட்டுக் கொள்ளலாம்.

Categories

Tech |