Categories
தேசிய செய்திகள்

“PM கிசான் திட்டம்” 11-வது தவணைத் தொகை வரவில்லையா….? அப்ப இதுதான் காரணம்…. உடனே மாத்திடுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி 11-வது தவணை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது. அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவில்லை என்றால் அதை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி pm-kisan திட்டத்தில் பதிவு செய்திருக்கும் உங்களுடைய பெயர் சரியாக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் ஏதேனும் தவறு இருந்தால் பணம் கிடைக்காது. அதன்பின் ஆதார் கார்டில் இருப்பது போன்று pm-kisan திட்டத்திலும் உங்களுடைய முகவரி இருக்க வேண்டும். இந்த முகவரியிலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் பணம் கிடைக்காது. இதனையடுத்து ஆதார் கார்டு இல்லை என்றாலும், நம்பர் தவறாக இருந்தாலும் பணம் கிடைக்காது.

எனவே ஆதார் கார்டு விவரங்களை சரிபார்க்க வேண்டும். இந்நிலையில் pm-kisan திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் பெரும்பாலும் வட மாநிலத்தவராக இருப்பதால் ஹிந்தி மொழியில் தங்களுடைய பெயரை பதிவு செய்கின்றனர். ஆனால் இந்தியா முழுவதும் pm-kisan திட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயரை பதிவு செய்ய வேண்டும். எனவே ஆங்கிலம் தவிர வேறு ஏதேனும் மொழியில் உங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும். மேலும் கேஒய்சி அப்டேட்டை சரிபார்க்க வேண்டும். இதற்காக ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி மேற்கண்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு 11-ஆவது தவணைக்கான பணம் கிடைக்கும்.

Categories

Tech |