Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகைக்கான பணம் வரவில்லையா….? அப்ப உடனே இத செய்யுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி 11-வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது. அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவில்லை என்றால் eKYC-ஐ  சரிபார்க்க வேண்டும். இந்த eKYC-ஐ  சரிபார்ப்பதற்கு ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு முதலில் நீங்கள் pm-kisan திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pm.kisan.nic.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

அதன்பின் பார்மர்ஸ் கார்னர் என்ற பிரிவின் கீழ் உள்ள eKYC -ஐ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விட்டு, ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்து, தேடல் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்த ஆதார் எண்ணில் உள்ள செல்போன் நம்பரை பதிவு செய்துவிட்டு Get OTP என்பதை கிளிக் செய்தால் செல்போனுக்கு ஓடிபி நம்பர் வரும். அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்தவுடன் eKYC வெற்றிகரமாக முடிவடைந்துவிடும். மேலும் சந்தேகங்களுக்கு‌ [email protected] என்ற இணையதள முகவரியிலும், 011-24300606, 155261 இலவச எண்ணிலும் கேட்டுக் கொள்ளலாம். ஆதார் மற்றும் OTP பிரச்சனைகளுக்கு [email protected] -ல் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |