Categories
தேசிய செய்திகள்

PM கிசான் பயனாளிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான விதிமுறை உள்ளது.

அதாவது விவசாயிகள் ஆதார் வாயிலான கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம் முடிக்க வேண்டும். கேஒய்சி என்பதை வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் நடைமுறையாகும். பொதுவாக இந்த நடைமுறையை வங்கிகள் அனைத்தும் கடைபிடிக்கின்றன. எனவே pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவரும் நிதி உதவி பெறுவதற்கு சரிபார்ப்பு மிகவும் அவசியம். மேலும் இனி கிசான் பயனாளிகள் இ கேஒய்சி-க்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் பொது சேவை மையம் மூலம் இ கேஒய்சி முடிக்க விரும்புவோர் 15 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் ஆன்லைனில் செய்தால் கட்டணம் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |