Categories
தேசிய செய்திகள்

PM கிஷன்: 12 ஆவது தவணை பணம் பெற “இது கட்டாயம்”…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகையையும் வழங்கப்படும்.

ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து இந்த திட்டத்தின் இணையதளத்தில் சென்று விபரங்களை சரி செய்து கொள்ள வேண்டும். இதுவரை ஆதார் எண்னோடு செல்போன் எண் இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ சேவை மையங்களுக்கு உடனடியாக சென்று இணைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திட்டத்தின் 12 வது தவணைத் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |