Categories
தேசிய செய்திகள்

PM கிஷான் திட்டத்தில்…. ரூ.2000 நிதியுதவி இவர்களுக்கு கிடைக்காது…. விதிமுறைகள் என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.

இதையடுத்து எட்டாவது தவணை செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது தவணைப் பணம் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிதியுதவி விவசாயிகள் அனைவருக்குமே கிடைத்துவிடாது. அதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன.  பயிரிடக்கூடிய நிலத்தை தங்களுடைய பெயரில் வைத்து விவசாயிகளுக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும். மேலும் அவர்கள் முறைப்படி PM கிஷன் திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த நிதியுதவி கிடைக்கும் .

இந்த திட்டத்தில் தவறாக இணைந்த விவசாயிகளும் நிதி உதவி பெற்று வருகின்றனர். அவர்களிடம் இருந்து நிதியை மத்திய அரசு திரும்ப பெற்று வருகிறது. இந்த திட்டத்தில் நிதியுதவி பெற  யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது குறித்து பார்க்கலாம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நபர் யாராவது ஒருவர் வருமான வரி செலுத்துவோர் ஆக இருந்தால் அவர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. பயிரிடக்கூடிய நிலத்தை தன் பெயரில் வைத்திருக்காத  விவசாயிக்கு இதில் உதவி கிடைக்காது .

சிலர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்வார்கள் அல்லது உறவினரின் பெயர் இருக்கும் இடத்தில் கூட விவசாயம் செய்வார்கள் அல்லது முன்னோர்கள் பெயரில் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்வார்கள் அவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. விவசாயி ஒருவரின் பெயரில் நிலம் இருந்து அவர் ஒருவேளை அரசு பணியில் இருந்தாலும் அவருக்கு நிதி உதவி கிடைக்காது.

Categories

Tech |