Categories
தேசிய செய்திகள்

PM கிஷான் திட்டம்: பட்டியலில் உங்க பெயர் இருக்கா…? இப்படி செக் பண்ணி பாருங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.  இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 14ஆம் தேதி விவசாயிகளுக்கு சேர வேண்டிய தவணை 2000 ரூபாய் அனுப்பப்பட்டது. இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக சுமார் 19,000 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

கிஷான் நிதி செக் பண்றது எப்படி?

pmkisan.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

அதில் “Farmers Corner” பிரிவில் “Beneficiary Status” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றை பதிவிட்டு உங்களுக்கு கிசான் நிதி வருமா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |