Categories
தேசிய செய்திகள்

PM கிஷான்: விவசாயிகளே ரூ.2000 பணம் வேணுமா….? புது வருஷத்தில் காத்திருக்கும் குட் நியூஸ்…!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையினுள் 13 ஆவது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 13-வது தவணைத்தொகை குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 2023 ஜனவரி மாதத்தில் பிஎம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 26 ஆம் தேதி வரை விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில்பெரும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |