கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடைபெற்று வரும் குளிர்கால கூட்ட தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் இதற்கான பதிலை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளார். அதன்படி 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2017 நவம்பர் முதல் தற்போது வரை 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 36 முறை பயணித்துள்ளதாகவும், அதில் 29 பயணங்களுக்கான மொத்த செலவு ரூ.239 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்திற்கு மட்டும் ரூ.23.27 கோடி செலவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.