Categories
அரசியல்

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……. அன்புமணி போட்டியிடுகின்றார்…!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்று இறுதி செய்யப்பட்டு நேற்று காலை தனியார் ஹோட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பட்டியலை வெளியிட்டார்.

Image result for பாமக வேட்பாளர் பட்டியல்

இதையடுத்து நேற்று இரவு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இரவு வெளியாகிய நிலையில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் கட்டமாக 5 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ,

தர்மபுரி – அன்புமணி

அரக்கோணம் – ஏ.கே மூர்த்தி

விழுப்புரம் – வடிவேல் ராவணன்

கடலூர் – கோவிந்தசாமி

மத்திய சென்னை- சாம் பால் போட்டி

ஆகியோர் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 வேட்பாளர்கள் பட்டியல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலோடு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |