நாட்டில் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கொரோனாவால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் பராமரிப்பும் பாதுகாப்பும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் இருபத்தி மூன்று வயதை எட்டும்போது 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை,மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் நான்காயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டையை குழந்தைகள் பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கான pm cares திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் திட்டத்தில் பயன்பெற முதலில் https://pmcaresforchildren.in/என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அதில் குழந்தைகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.
அரசு ஒப்புதல் கிடைத்த பிறகு குழந்தைகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் உள்ளிட்ட திட்டத்தின் அனைத்து பலன்களும் அப்படியே வந்து சேரும்.
இதனை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெறுங்கள்.