நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் வருங்கால கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் வருங்கால கணவரான கிளார்க் கேபோர்டிற்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இந்த தகவலை வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரின் மூன்று வயது குழந்தை நலமாக உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.