Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமர் மோடியின் முடிவு சரியானது – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்!

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார். இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது நீட்டிக்கப்படுகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இன்றைய தினம் 4 மணி நேரத்திற்கும்  மேலாக மாநில முதல்வர்களுடன்  பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த ஊரடங்கை  மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  ட்விட் செய்துள்ளார்.

Jaan hai to jahan hai': PM Modi holds second meeting with CMs ...

அதில், ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமர் மோடியின் முடிவு சரியானது என்று தெரிவித்துள்ளார். எனவே இது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், பல நாடுகளில் இந்தகொரோனா  அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் குறைவாக இருப்பதற்கு காரணம் நாம் விரைவாகவே இந்த ஊரடங்கை அமல்படுத்தியதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருமே எதிர்பார்த்ததுதான் அடுத்த இரண்டு வார காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இது தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக நாட்டு மக்களிடம் சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |