ஐரோப்பிய நாடான ஸ்லோவாக் (Slovakia) இன் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினி கொரானா வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரவ தொடங்கியது .
மேலும் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி ஸ்லோவாக் இல் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பிரதமருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிராட்டிஸ்லாவில் உள்ள மருத்துவமனையில் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் அவர் 18-ஆம் தேதி நான் பணிக்கு திரும்ப விரும்புவதாக நம்பிக்கை உள்ளது என்ற செய்தியை வெளியிட்டார்.
இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினி தொற்று ஏற்பட்டுள்ளது என்பது வதந்தி ஆகும்.
அவருக்கு உடல் சோர்வு மற்றும் நிமோனியா உள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
I resolutely deny hoax tweets that I have got a coronavirus. A total nonsense.
— Peter Pellegrini (@PellegriniP_) February 24, 2020
இதை தொடர்ந்து பிரதமர் பீட்டர் தனக்கு கொரானா வைரஸ் தொற்று உள்ளது என்பது வதந்தி . இது முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.