Categories
தேசிய செய்திகள்

PM-KISAN திட்டத்தில் இணைவது எப்படி…. இதோ எளிய வழி…. விவசாயிகளே உடனே வேலைய முடிங்க…!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11-வது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இரண்டாவது தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கு வந்து சேரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் இன்னும் நிறைய விவசாயிகள் இணையாமல் உள்ளனர். இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்தல் அதிகாரியை அணுக வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற முடியும்.

அது தவிர https://pmkisan.gov.in/என்ற இணையதளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இந்த திட்டத்தில் இணைய ஆதார் கார்டு அவசியம். அதுமட்டுமல்லாமல் குடியுரிமைச் சான்றிதழ்,நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தும் இதற்கு தேவைப்படும்.

முதலில் PM-KISAN ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான pmkisan.gov.in  பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் ஃபார்மர்ஸ் கார்னர் என்கிற பகுதியை கிளிக் செய்து புதிய விவசாயி பதிவு  பகுதிக்குள் நுழைய வேண்டும்.

அதில் உள்ள கிராமப்புற விவசாயி பதிவு அல்லது நகர்ப்புற விவசாயி இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.

அதில் ஆதார் எண், மொபைல் எண்ணை பதிவு செய்து மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து Get OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

உங்களது மொபைல் எண்ணிற்கு பெறப்பட்ட OTP எண்ணை பதிவு செய்து மாநிலம், மாவட்டம், வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறகு ஆதார் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்து நில விவரங்களை பதிவு செய்து சேமி என்பதை அழுத்தவும்.

இதனை சரியாக செய்துவிட்டாலே PM-KISAN திட்டத்தில் இணைந்துவிடலாம்.

Categories

Tech |