Categories
தேசிய செய்திகள்

PM kisan: மே 31 வங்கிக்கணக்கில் பணம்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 11-வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் pm-kisan நிதி உதவி திட்டத்தின் கீழ் 11-வது தவணை தொகை மே 31 ஆம் தேதி வந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 14 ஆம் தேதியே வங்கி கணக்கில் 2000 ரூபாய் வந்து சேரும் என காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தற்போது மே 31-ஆம் தேதி பணம் வந்துவிடும் என வெளியாகியுள்ள தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தத் திட்டத்தில் புதிய விதிமுறை வந்துள்ளது. அதாவது விவசாயிகள் தங்களது கணக்கில் கேஒய்சி சரி பார்ப்பை முடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். இல்லையென்றால் நிதி உதவி வருவதில் சிக்கல் ஏற்படலாம். இந்த அப்டேட்டை முடிக்க முதலில் கால அவகாசம் வழங்கப் பட்டிருந்த நிலையில் திடீரென அது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் மீண்டும் அந்த விதிமுறை கட்டாயமாக படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேஒய்சி அப்டேட் செய்ய மே 31-ஆம் தேதி கடைசி நாள். அதற்குள் விவசாயிகள் அனைவரும் இந்த வேலையை முடிக்க வேண்டும்.

அதற்கு முதலில் https://pmkisan.gov.in/என்ற இணையதள பக்கத்தில் சென்று farmers corner என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் e-kyc என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

அதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு get OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் ஓடிபி அனுப்பப்படும். அதனை பதிவிட்டால் submit for authentication என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு கேஒய்சி அப்டேட் செய்யப்படும்.

Categories

Tech |