Categories
தேசிய செய்திகள்

PM Kisan…. விவசாயிகளுக்கு இன்னும் 2 மாசம் தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் காத்திருந்தனர்.

நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் கடந்த மே 31-ஆம் தேதி 11-வது தவணை பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது. 10 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக 21 ஆயிரம் கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 11 ஆவது தவணைப் பணம் இன்னும் நிறைய விவசாயிகளுக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. அவர்களின் பிஎம் கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் ஒருவேளை பணம் கிடைக்காமல் போகலாம்.

அதாவது பெயர், வங்கி கணக்கு மற்றும் ஆதார் போன்ற விவரங்கள் அனைத்தும் சரியாக அப்டேட்டில் இருக்க வேண்டும். அதில் ஏதாவது தவறு இருந்தால் பணம் வருவதில் சிக்கலாகிவிடும். அதனை விவசாயிகளே pm-kisan இணையதளத்தில் சென்று சரிசெய்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுடைய விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பது பற்றி  இதில் பார்க்கலாம்.

Pm-kisan இணையதளத்தில் பணம் கிடைக்காத விவசாயிகள் இந்த எண்களில் புகார் செய்யலாம்.

011-24300606.

18001155266

155261

011-23381092, 23382401

011-24300606

0120-6025109

மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

விவசாயிகள் பிஎம் கிசன் நிதி உதவி பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கேஒய்சி சரி பார்ப்பு என்பது கட்டாயமான ஒன்று. விவசாயிகளின் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பர் சரிபார்ப்பு சார்ந்த விதிமுறை தான் இது. இதனை முடிக்காவிட்டால் விவசாயிகளுக்கு பிஎம் கிசன் நிதி உதவி வந்து சேராது. எனவே மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டு இந்த வேலையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

இதையடுத்து pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவரும் தங்களது கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பதற்கு மே 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் தற்போது முடிவடைந்த நிலையில் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 31-ஆம் தேதி வரை கேஒய்சி சரிபார்ப்பு முடிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைனில் எளிதாகவே செய்து முடிக்கலாம்.

அதற்கு முதலில் https://pmkisan.gov.in/என்ற இணையதள பக்கத்தில் சென்று farmers corner என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் e-kyc என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

அதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு get OTP என்ற பட்டனை கிளிக் செய்தால் ஓடிபி அனுப்பப்படும். அதனை பதிவிட்டால் submit for authentication என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு கேஒய்சி அப்டேட் செய்யப்படும்.

Categories

Tech |