Categories
தேசிய செய்திகள்

PM KISAN: விவசாயிகளே உங்களுக்கு இன்னும் பணம் கிடைக்கலையா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் நழுவடைந்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தேவையான விவசாய பொருட்களை வாங்கிக் கொள்ள உதவியாகவும் மத்திய அரசு வருடத்திற்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 8,84,56,693 விவசாயிகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2,43,03,867 விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பன்னெண்டாவது தவணை பணம் கிடைக்காதவர்கள் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ள இலவச ஹெல்ப்லைன் எண்களான 011-24300606 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு எதனால் பணம் வந்து சேரவில்லை என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |