Categories
தேசிய செய்திகள்

Pm-kisan 11-வது தவணை உங்களுக்கு கிடைக்கவில்லையா?…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் செலுத்தப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் சில விவசாயிகளுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என புகார் எழுந்துள்ளது.

pm-kisan நிதியின் மூலம் பெறப்பட்ட 2000 ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்றால் இந்த மொபைல் எண்கள் மற்றும் ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொண்டு அதற்கான காரணத்தை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் 011-24300606 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பிரதமர் கிசான் நிதியில் பதிவு செய்துள்ள விவசாயிகள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்களது புகார் தெரிவிக்கலாம்.

பலரின் பெயர் முந்தைய பட்டியலில் இருந்தாலும் புதிய பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்த முறை பணம் வந்தது இந்த முறை வரவில்லை. நீங்கள் பணம் பெறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. எனவே pm-kisan ஹெல்பிளின் எண்ணில் புகார் அளித்தால் இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு கட்டணம் இல்லா எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் கிசான் இலவச எண்: 18001155266

பிரதமர் கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261

பிரதமர் கிசான் லேண்ட்லைன் எண்: 011-23381092, 23382401

பிரதமர் கிசான் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606

பிரதமர் கிசான்-க்கு மற்றொரு ஹெல்ப்லைன் உள்ளது: 0120-6025109

மின்னஞ்சல் ஐடி: [email protected]

Categories

Tech |