Categories
தேசிய செய்திகள்

Pm-kisan 12-வது தவணை எப்போது தெரியுமா?…. விவசாயிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11-வது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இரண்டாவது தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கு வந்து சேரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் இன்னும் நிறைய விவசாயிகள் இணையாமல் உள்ளனர்.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்தல் அதிகாரியை அணுக வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற முடியும். அது தவிர https://pmkisan.gov.in/என்ற இணையதளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இந்த திட்டத்தில் இணைய ஆதார் கார்டு அவசியம். அதுமட்டுமல்லாமல் குடியுரிமைச் சான்றிதழ்,நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தும் இதற்கு தேவைப்படும்.

Categories

Tech |