Categories
தேசிய செய்திகள்

“PM‌ கிசான் திட்டம்” 12-வது தவணைத் தொகை வரவில்லையா…. அப்ப உடனே இத செய்யுங்க….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 11-வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது.

அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து 12-வது தவணை தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணம் உங்களுக்கு வரவில்லை என்றால் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [email protected] என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். அதோடு 155261, 1800115526, 011-23381092 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் 12-வது தவணை தொகை குறித்து உங்களுடைய புகாரை தெரிவித்து பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |