pm-kisan திட்டத்தில் உங்களுக்கான 11வது தவணைப் பணம் விரைவில் வரவிருக்கிறது.
விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூபாய் 6000 உதவி தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை மூன்று தவணைகளாக பிரித்து ரூபாய் 2௦௦௦ ஆக பிரித்து பத்து தவணைகள் வழங்கப்பட்டு. இந்த நிலையில் தற்போது 11வது தவணைப் பணம் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு பதிவு செய்திருந்த விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த திட்டத்திற்கு பல்வேறு விவசாயிகளுக்கு பணம் வருவதில்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறது. ஏனென்றால் விவசாயிகளின் பெயர், வங்கிக் கணக்கு விவரம்,, தொலைபேசி எண், ஆதார் போன்ற விபரங்களை தவறாக பெற்றிருந்தால் நிதி உதவி கிடைக்காது. இதற்கிடையில் இந்த 11வது தவணை நிதி உதவி உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பது குறித்து நீங்களே அறிந்து கொள்ளலாம். எப்படி என்றால் ஆன்லைனில் pmkisan.gov. in என்ற வெப்சைட்டில் சென்று Beneficiary Status என்ற ஆப்ஷனில் get data என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இந்த நிலையில் தற்போது உங்களுடைய விண்ணப்ப நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி விபரங்களை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 11வது தவணைப் பணம் கிடைக்க சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் பெயர் பட்டியலை சரிபார்ப்பது நல்லது. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் pm-kisan வெப்சைட்டில் அப்டேட் செய்து கொள்ளலாம்.