இந்தியாவின் எதிர்காலம் டிஜிட்டல் விவசாயம் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ஹைதராபாத்தில் இருக்கும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, இந்தியாவின் எதிர்காலம் டிஜிட்டல் விவசாயம். இளைஞர்கள், இதில் அதிகமாக பங்களிக்கலாம். விவசாயத்தின் மூலமாக பெண்களுக்கு சுய உதவிக் குழுக்களில் ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக விவசாயிகளை மேம்படுத்துவதற்கு அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. நதிநீர் இணைப்பின் மூலமாக நீர் பாசனத்தின் படி அதிகமான நிலங்கள் கொண்டுவரப்படுகின்றன. சிறு விவசாயிகளுக்கு அதிக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.