இந்திய பிரதமரான நரேந்திர மோடி, யூடியூபில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, யூடியூப் சேனலில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். உலக தலைவர்களிலேயே, யூட்யூப் தளத்தில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2007 ஆம் வருடத்தில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சமயத்தில், நரேந்திர மோடி யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார்.
இவரின் சேனலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடந்த நேர்காணல் மற்றும், கொரோனாவை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது ஆகிய விடியோக்கள் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் 7.53 கோடி பேர் பின்பற்றுகிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் 6.5 கோடி பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.