ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடத்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஏப்., 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினாா். அப்போது பெரும்பாலான கட்சிகளும் மாநிலங்களும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழக பழனிசாமியும் பங்கேற்றுள்ளார். தற்போதைய சூழலில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீடிக்கவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்னரே ஊரடங்கை வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக ஒடிஸா, பஞ்சாப் அரசுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.