Categories
தேசிய செய்திகள்

மாநில அந்தஸ்து பெற்ற நாள்… வாழ்த்து தெரிவித்த மோடி!

மாநில அந்தஸ்து பெற்ற நாளை கொண்டாடும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்று தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அம்மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.

அதன்படி விளையாட்டு, இசையில் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மேகாலயா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அதன் வளர்ச்சிக்காக பிரார்த்திப்பதாக மோடி பதிவிட்டார். தேச வளர்ச்சிக்கும் பாரம்பரியத்துக்கும் பெயர் போன திரிபுராவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்த மோடி, கலாசாரத்தில் சிறந்து விளங்கும் மணிப்பூரின் வளர்ச்சிக்கும் தனது வாழ்த்தை பதிவு செய்தார்.

Categories

Tech |