நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 124ல் இருந்து 194ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 70 பேர் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோ வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.