Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை” – தேர்தல் ஆணையம்!!

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அளிக்கப்பட  நான்காவது புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தின்  நந்தேட் பகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசும் வகையில் ”நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்” தொகுதி என  வயநாடு தொகுதியை குறிப்பிட்டு பேசினார்.

Image result for PM Modi does not violate election law Election Commission action!பிரதமர் மோடி இப்படி பேசியது  தேர்தல் விதி மீறல் என காங்கிரஸ் கட்சியின்  சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரித்து,  பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தெரிவித்தது. இதன்படி பிரதமர் மோடியின் மீதுள்ள  4 வது விதிமீறல் புகாரையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

Categories

Tech |