3 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளை முன்னேற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவிற்கு நரேந்திர மோடி சென்றிருக்கிறார்.
முதலில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஓலப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்ததால் அந்நாட்டின் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இரண்டு நாடுகளின் தூதரக உறவை ஆரம்பித்து 70 வருடங்கள் நிறைவடைகிறது. தற்போது, ஜெர்மன் பிரதமருடன் நரேந்திர மோடி இரண்டு தரப்பு உறவு தொடர்ப்பான பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே, நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுநாளும் கோபன்ஹேகன் நகரில் இருப்பார். அதனையடுத்து இந்தியாவிற்கு திரும்பும் வழியில் பாரிஸில் தங்கி பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனை சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.