வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்து.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி வந்தார்.அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் வாரணாசியின் முக்கிய வீதிகளில் வழிநெடுக நின்ற தொண்டர் பிரதமர் மோடியை மலர் தூவி வரவேற்றனர்.