“இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்” என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை வந்து சேரவில்லை. கொரோனா தொற்றை ஆய்வு செய்யும் பிசிஆர் கருவிகள் போதுமான அளவு உள்ளது. “இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்”. “ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி கூறும் வழியில் தமிழக அரசு செயல்படும்” என்று தெரிவித்தார்.