இந்திய பிரதமர் நரேந்திரமோடி 3 நாட்கள் பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றுள்ள நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்சை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றிருக்கிறார். டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் முதலில் ஜெர்மன் பிரதமரை சந்தித்திருக்கிறார். அந்நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனியில் வாழும் இந்திய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அதன்பிறகு அந்நாட்டு அதிபரான ஒலிப் ஸ்கோல்சை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களும், இரண்டு நாடுகளின் உறவை பலப்படுத்துவது, பாதுகாப்பு, ஒத்துழைப்பு வர்த்தகம், போன்றவை தொடர்பில் ஆலோசித்திருக்கிறார்கள்.