இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.
இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றி விவாதித்தனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய வருங்காலம் தொடர்பான துறைகளை முன்னேற்றுவதற்கு இரண்டு தரப்பு ஒத்துழைப்பு பற்றி இருவரும் பேசினார்கள். நரேந்திர மோடி இருநாட்டு கூட்டமைப்பை பலப்படுத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி கூறினார். அதன் பிறகு இருவரும் இந்தோனேசிய நாட்டின் அதிபரை சந்தித்துள்ளனர்.