Categories
தேசிய செய்திகள்

பொருளாதார அறிஞர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதார அறிஞர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி நிதி ஆயோக் அலுவலத்தில் பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபெக் டெத்ரோய் ஆகியோரும் உடனிருந்தனர்.

Image result for PM Modi meets with economists

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய பொருளாதாரம் 5 விழுக்காடாக சரிந்துள்ளது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |