இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பு கலந்த உபசரிப்புகள் ஆகியவை இந்திய நாட்டின் கலாசாரத்தையும் மரபையும் பிரதிபளித்தது.
இந்த மாநாடு தனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இந்த உச்சிமாநாடு சிறப்பாக அமைய ஒத்துழைத்த தமிழ்நாடு பொதுமக்களுக்கும், கலாச்சார, சமூக, அரசியல் அமைப்புகளுக்கும், தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.