குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டின் தலைநகருக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு அமைப்பில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நான்கு நாடுகள் சேர்ந்து செயல்படுகிறது. இந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நேரடியாக கலந்து கொள்ளும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா, அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான அந்தோணி அல்பானீஸ் போன்ற நான்கு பேரும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.
நேற்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் புறப்பட்டு இன்று அதிகாலையில் டோக்கியோவிற்கு சென்றிருக்கிறார். அங்கு, தூதரக அதிகாரிகள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றிருக்கிறார்கள்.