கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்த வரை டெல்லி , கர்நாடகம் , மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை , பிற நாடுகளுடனான போக்குவரத்து சேவை இரத்து , விசா மறுப்பு என பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகின்றார். இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் உரையாற்ற இருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
PM Shri @narendramodi will address the nation on 19th March 2020 at 8 PM, during which he will talk about issues relating to COVID-19 and the efforts to combat it.
— PMO India (@PMOIndia) March 18, 2020