பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார்.
நாடு முழுவதும் ஊரடங்கு இன்றோடு நிறைவடைய இருக்கும் சூழலில் ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீடித்திருக்கிறது. உதாரணமாக தமிழகம் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதே போல பல மாநிலமும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கூட முழு ஊரடங்கு நீட்டித்து உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையற்ற இருக்கின்றார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கால் மீண்டும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? சமூக இடைவெளி, முக கவசம் அணிவது மற்றும் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை சுட்டிக்காட்ட இருக்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த உரை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், இந்த ஊரடங்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் ஒவ்வொரு மாநில அரசும் செய்ய வேண்டியவை என்ன ? கொரோனவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
Prime Minister @narendramodi will address the nation at 4 PM tomorrow.
— PMO India (@PMOIndia) June 29, 2020