அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்கள்.
சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனாவை மிக வலிமையாக எதிர்த்துப் போராடுகின்றது. அதற்கு அடுத்தபடியாக கொரோனவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். சற்று காலம் தாழ்த்தப்பட்டாலும் கூட முழுமையான ஊரடங்கு அமல் படுத்தி நாட்டு மக்களை ஒருங்கிணைத்து அதில் ஓரளவு நாம் முன்னேறி இருக்கிறோம். அமெரிக்காவில் இது சற்று கையை மீறி விட்டதாகவே பார்க்க முடிகிறது.குறிப்பாக நியூயார்க்கில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளமாக ஏற்படுகிறது.
இந்நிலையில் இரு பெரிய ஜனநாய நாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடுகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த இந்திய-அமெரிக்க உறவின் முழு வலிமையையும் பயன்படுத்த உறுதி எடுத்துள்ளதாக இரு நாட்டு தலைவர்களும் பேசி இருப்பதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்.