Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. பிரதமர் தொடங்கிய ரயில் தண்டவாளத்தில் வெடி விபத்து…. பயங்கரவாதிகள் சதியா? வெளியான தகவல்….!!!

குஜராத்தில் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உதயபூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் ஆர்பிஎஃப் புலனாய்வு அமைப்புகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ரயில்வே பாதையில் இருந்து சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சதி திட்டத்திற்கு பின்னால் தீவிரவாதிகள் உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உதய்பூரில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி மாநாடு தொடர்பான உலக நாட்டு தலைவர்களின் பிரதிநிதிகள் பங்குபெறும் கூட்டம் நடைபெற நிலையில், இந்த சதித்திட்டம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |