Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீடியோ மூலம் நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். சில தகவல்களை மக்களிடம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில் வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சிறு செய்தியை பகிர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் 3வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தேவைப்படும் கச்சா பொருட்களும் போதுமான அளவு தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |