மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30, டிசம்பர் 6, 12, 16, 20 என ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆளும் பாஜக சார்பாக பிரதமர் மோடி இன்று தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், ” 25 நவம்பர் 2019, பிரதமர் நரேந்திர மோடி காலை 11.35 மணிக்குத் தல்டான்காஞ் பகுதியிலும், மதியம் 1:20 மணிக்கு கும்லா பகுதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்” என கூறியுள்ளது.
2014ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோட்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவை எதிர் கொண்டது காங்கிரஸ்.
ஆனால், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் ஒன்றியத்துடன் கூட்டணி வைத்துக்கொண்ட பாஜக, 43 தொகுதிகளை வென்று முதலமைச்சர் ரகுபார் தாஸ் தலைமையில் ஆட்சி அமைத்தது.