Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி….!!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

modi rahul க்கான பட முடிவு

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “  ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார். மேலும் ராகுலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |