டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் லட்சுமிதேவி மற்றும் விநாயகரின் படங்கள் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் திருவுருவப்படம் இடம்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதில் குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் மாபெரும் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு போன்றவற்றை நாம் எப்படி புறக்கணிக்க முடியும். அவர் உலகம் முழுவதும் இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளார். இந்தியாவை பெருமைப்படுத்தும் பிரதமர் மோடியை உலகமே நினைவு கூறும் என்ற பதிவிட்டுள்ளார். மேலும் 500 ரூபாய் நோட்டுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/ramkadam/status/1585506080515190784?s=20&t=gtGkAd9_V4RTO1E-XDv4Xw