நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் சேக் அசீனா முதல் நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டார்.
மேலும் வெங்காய ஏற்றுமதியை திடீரென இந்தியா எதற்காக நிறுத்தியது என எனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் , இதனால் தன்னுடைய சமயல்காரரிடம் அனுமதி இல்லாமல் உணவில் வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று சொல்லி விட்டதாக கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை இந்தியா எடுக்கும் முன் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் உதவியாக இருக்கும் எனவும் சேக் அசீனா சுவாரசிய பேச்சினார்.