ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் இராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒரு நாள் விலக வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.
அதனை தொடர்ந்து இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளைஞர்களின் இயக்கமும் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.